படிக்காத பக்கங்கள் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பேசிய விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பாடலுக்கு இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்விக்கு இளைய ராஜாவை தாக்கி பேசியிருப்பார். ஒரு பாடலுக்கு இசை, மொழி இரண்டுமே ஒரு பாடலுக்கு அவசியம் இவை இரண்டும் இல்லாவிட்டால் அது பாட்டே கிடையாது. இதை அறியாதவன் ஞானி கிடையாது. என்று இளையராஜாவை தாக்கி பேசியிருப்பார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கை அமரன் பேசியிருப்பார்.
வைர முத்து எங்களால் தான் வளர்ந்தவர். எங்களால் தூக்கிவிடப் பட்டவர்.
பாரதிராஜா போய் சொல்லவில்லை என்றால் இளையராஜா ஏற்று கொண்டிருக்க மாட்டாரே என்பதை எல்லாம் நினைச்சு பார்த்திருந்தால் இந்த மாதிரி அவர் சொல்லியிருக்க மாட்டார்.
பாடல்களை பொறுத்தவரைக்கும் வைரமுத்து அவர்கள் நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாமே தவிர நல்ல மனுஷன் கிடையாது, நல்ல புத்தி கிடையாது.
வைரமுத்து அவர்களே, இனிமேல் இளையராஜாவை குற்றமோ, குறையோ சொல்லுவதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். என்று ஆவேசமாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.