மறுபிறப்பு என்பது யாதெனில் ஓர் ஆன்மாவானது தனது உடலை துறந்த பின் தன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ உயிரினமாகவோ தோன்றுவதனையே சுட்டி நிற்கின்றது.
அந்த வகையில் இந்த மறுபிறப்பு கொள்கையானது இந்து மற்றும் பௌத்த மதத்தின் பிரதான கொள்கையுள் ஒன்றாகவே திகழ்கின்றது. மேலும் இக்கொள்கை சமயம் சார்ந்ததாகவும் காணப்படுகின்றது.
மறுபிறப்பு வேறு சொல்
- அடுத்தபிறவி
- மறுஜென்மம்
- அடுத்தஜென்மம்
- புனர் ஜன்மம்
இந்து சமயத்தில் மறுபிறப்பு கொள்கை
இந்து சமயத்தின்படி மறுபிறப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு கொள்கையாகும். அதாவது தான் செய்த கர்ம பலன்களுக்கு ஏற்ப ஒருவரது பிறப்பானது அமைகின்றது என்பதோடு இறந்த பின்னர் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப சுவர்க்கம், நரகம் என்பது தற்காலிகமானவைகளே என்பதை சுட்டி நிற்கின்றது.
You May Also Like: