இலங்கைக்கான இணைப்பை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டு இண்டிகோ நிறுவனம் மும்பை-கொழும்பிற்கு நேரடி விமான சேவையினை இன்றே (12) தொடங்கியுள்ளது.
இவ்வாறு இண்டிகோ நிறுவனம் இலங்கையுடனான தனது இணைப்பை விரிவுபடுத்தி செல்கின்றது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை பிரைவேட் லிமிடெட்) தெரிவித்துள்ளது.
இதேவேளை வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற மூன்று நாட்களிலேயே விமானங்களை இயக்கும் என்பதோடு இந்தியாவின் மூன்று இடங்களுக்கும் இச் சேவை வழங்கப்படுகிறது.
இதன்படி கொழும்பிலிருந்து சென்னை நோக்கி இரு முறையும் பெங்களுூரிற்கு ஒரு நாளும், ஹைதரபாத்திற்கு வாரத்தில் ஆறு நாட்களுக்கும் இவ் நேரடி விமான சேவை இடம்பெறும்.
மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணத் தொடர்பானது வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்குகின்றது.
இண்டிகோ நிறுவனத்துடன் சமீபத்தில் AASL இந்தியாவுடனான செயல்பாடுகளை தொடங்குவதை முன்னிட்டு பேச்சுவார்த்தையை நடாத்தியதோடு யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமானச் சேவையையும் தொடங்குகிறது.
இதன்படி இவ் நேரடி விமானச் சேவையானது வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்தும் எனவும் விமான சேவைகள் இலங்கை பிரைவேட் லிமிடெட் (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
Read More:
பிறந்த நாள் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகள்களை தவிர்க்கும் கனேடியர்கள்