இந்த உலகமானது இரவு பகல் என மாறி வரும் கால சுழற்சியின் படியே இயங்குகின்றது. அந்தவகையில் தமிழர்கள் ஒரு நாளுக்குரிய காலத்தை ஆறு பிரிவுகளாக பிரித்து நோக்கினர்.
அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை உள்ள பொழுதையே நள்ளிரவாக கொண்டனர். மேலும் நள்ளிரவானது முதல் யாமம், இடை யாமம், கடை யாமம் என 3 பிரிவாக பிரித்து நோக்கப்பட்டது.
பொதுவாக நள்ளிரவு எனப்படுவது ஒரு நாளில் இருந்து அடுத்த நாளுக்கு மாறும் நேரத்தினையே சுட்டி நிற்கின்றது. மேலும் இது ஒவ்வொரு நாளினதும் தொடக்கத்தையும் முடிவையும் சுட்டுவதாக காணப்படுவதோடு ஒரு நாளுக்கும் மற்றைய நாளுக்குமான பிரிதொரு பிளவு புள்ளியாகவும் நள்ளிரவே திகழ்கின்றது.
நள்ளிரவு வேறு சொல்
- நடுநிசி
- நடுராத்திரி
- நடு இரவு
- சாமம்
You May Also Like: