அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் உணர்சிவயப்பட்ட வெளிப்பாடே பயப்படுதலாகும். அந்த வகையில் பயப்படுதலானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற தூண்டலின் காரணமாகவே ஏற்படுகின்றது.
பயம் என்பதனை பொதுவாக மன உணர்வின் வெளிப்பாடுகளில் ஒன்றாக கூற முடியும். இப்பயமானது உலகில் பிறந்த அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கின்றது.
பயப்படு வேறு சொல்
- அச்சப்படு
- பயம் கொள்
- திடுக்கிடு
- பீதியுறுதல்
- கிலிகொள்ளுத்தல்
பயத்திற்கான காரணங்கள்
மனிதர்களானவர்கள் தான் கற்றுக் கொள்பவற்றின் மூலமாக பயங்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும் மனித இயல்பின் ஒரு பகுதியாகவும் பயமானது காணப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக பாம்புகள், விலங்குகள் போன்றவற்றை கண்டு பயப்படுதலை குறிப்பிடலாம். அதேபோன்று வரலாற்று மற்றும் கலாச்சார தாக்கங்களின் காரணமாகவும் பயமானது எம்மை ஆட்கொள்கின்றது.
You May Also Like: