பிரேம்ஜி கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனும் ஆவார். 1997 ஆம் ஆண்டில், வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் ஆகியோர் நடித்த வாண்டட் என்ற படத்தின் இயக்குனராக திரைத்துறையில் நுழைய பிரேம்ஜி திட்டமிட்டார் .
வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான கோட் படத்திலும் நடித்துள்ளார்.
பிரேம்ஜிற்கு கொரோனா காலகட்டத்தில் இந்து சமூகவலைதளம் மூலம் அறிமுகனானர். இதன்பின் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் விட்டு விட்டனர். இந்து மீண்டும் அவரிடம் கதைத்து அவர்களுடைய காதலை புதுபித்துள்ளனர்.
தற்போது கடந்த ஜூன் 9 ம் திகதி இவர்களுடைய திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமே அழைப்பிதல் விடுக்கபட்டது.
திருமணத்திற்கு சென்னை 600028 படத்தில் நடித்த ஜெய் , சிவா உட்பட இவருடைய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இவரது பெரியப்பா இளையராஜா மற்றும் சகோதரன் யுவன்சங்கர் ராஜா மற்றும் அவர்களது குடும்பம் பங்கேற்கவில்லை.
இதனால் ரசிகர்கள் கங்கை அமரனுக்கும் அவரது சகோதரர் இளையாராஜாவிற்கும் சண்டை அதனால் தான் பங்குகொல்லவில்லை என்று கூறினார். இவர்கள் பங்குகொள்ளதாது சமுகவலைதளங்களில் காட்டு தீ போல பரவியது. இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் விதமாக பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து இருவரும் இளையாராஜாவிடம் ஆசீர்வாதம் பெரும் புகைபடம் சமூகவலைத்தளங்களில் வெளிவீட்டுள்ளார்.
இவருக்கும் இந்துவிற்கும் 20 வயதுகள் வேறுபாடு உள்ளது என்று கூறப்படுகின்றது. இவ்வாறு இருக்க அந்தணன் பிரேமஜிக்கும் இவருடைய மாமியாருக்கும் ஒரே வயது என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.