விளையாட்டின் முக்கியத்துவம் கட்டுரை

vilaiyattin mukkiyathuvam katturai in tamil

எமது அன்றாட வாழ்வில் மிக முக்கியம் வாய்ந்த தொன்றாக விளையாட்டு காணப்படுகின்றது. எமது ஆரோக்கியத்தில் விளையாட்டின் பங்கானது அளப்பரியதாகும். மேலும் உற்சாகத்துடனும், தைரியமாகவும் இருப்பதற்கு விளையாட்டுக்களே துணை புரிகின்றது.

விளையாட்டின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விளையாட்டின் முக்கியத்துவம்
  • விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள்
  • கல்வியும் விளையாட்டும்
  • இன்றைய காலகட்ட விளையாட்டு முறை
  • முடிவுரை

முன்னுரை

விளையாட்டு ஒரு கலையாகும் என்ற வகையில் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட செயற்பாடாகவே விளையாட்டானது திகழ்கின்றது.

விளையாட்டுக்களே எம்மை சிறந்த வீரர்களாக திகழ்வதற்கு வழியமைத்து தருகின்றன. இக்கட்டுரையில் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி காணலாம்.

விளையாட்டின் முக்கியத்துவம்

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தனது சிறுபராயத்தில் இருந்து விரும்பக்கூடிய ஒன்றான விளையாட்டானது வாழ்வில் முக்கியமான ஒரு அங்கமாகும்.

அந்த வகையில் ஒரு மனிதனை சிறந்த முறையில் சிந்திப்பதற்கு தூண்டுகின்றது, இதயநோய்களை தவிர்ப்பதற்கும், மன அழுத்தமின்றி வாழ்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே விளையாட்டாகும்.

மேலும் சிந்தனை திறன் விருத்தி ஏற்படல், மகிழ்ச்சியான சிந்தனை, உடல் திறன்கள் வலுப்படல், ஒத்துழைப்பு தன்மை, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான மனப்பக்குவம் வளரல் என பல்வேறு விடயங்களை வளர்த்துக்கொள்வதில் முக்கியத்துவமிக்கதொன்றாக விளையாட்டானது அமைந்துள்ளது.

விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள்

விளையாட்டானது பல்வேறு நன்மைகளை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. அந்த வகையில்

சீரான உடற்பயிற்சிக்கு வழிவகுத்தல்: மனிதனானவன் விளையாடும் போது சிறந்த உடற்பயிற்சியினை பெற்றுக்கொள்கின்றான். அந்த வகையில் சிறந்த விளையாட்டே சிறந்த ஆரோக்கியமாகும்.

சகிப்புத்தன்மை ஏற்படல்: விளையாட்டினூடாக வெற்றி, தோல்வி என்பன ஏற்படுவதோடு அதனூடாக சகிப்புத் தன்மையானது எம்மிடம் வளர்ச்சியடைவதனை காணலாம்.

மன ஆரோக்கியத்திற்கு வழிவகுத்தல்: விளையாடுவதன் மூலமாக எதிர்மறையான சிந்தனைகள் எம்மை விட்டு நீங்குவதோடு மன அழுத்தங்கள் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக வாழவும் முடியும்.

குழுப்பணி திறன்: விளையாடுவதன் மூலமாக ஒருவரிடத்தில் குழுப்பணி செய்யும் திறனானது வளர்ச்சியடைகின்றது. மேலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை மற்றும் குழு ஒத்துழைப்பும் ஏற்படுகின்றது.

பிறரை மதிக்கும் மனப்பான்மை ஏற்படல்: விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் தனது சகாக்கள் மற்றும் நடுவர்களை மதித்து நடக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக பிறரை மதிக்கும் மனப்பான்மை வளர்ச்சியடைகின்றது.

கல்வியும் விளையாட்டும்

இன்று கல்விக்கு பிரதான இடத்தை கொடுப்பதனை விட விளையாட்டுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதனை காண முடிகின்றது. இதன் காரணமாகவே கல்வியில் இன்று விளையாட்டு தொடர்பான பாடங்களையும் உள்ளடக்கியுள்ளனர்.

சிறந்த கல்விக்கு வித்திடக்கூடியதாகவும் விளையாட்டு திகழ்வதோடு மட்டுமல்லாமல் இன்று பள்ளிகளில் பல விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு மாணவர்கள் தமது திறமைக்கான வெற்றியை பெறுகின்றனர்.

இன்றைய காலகட்ட விளையாட்டு முறை

இன்றைய காலகட்டத்தில் விளையாட்டானது கணிணி, தெலைபேசி என நவீன தொழிநுட்ப சாதனங்களுடனேயே காணப்படுகின்றது. இவ்வாறான விளையாட்டானது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக அமைகின்றது.

மேலும் இதனூடாக கல்வி கற்பதில் கவனச்சிதறல்கள் மற்றும் கண்பார்வை இழப்பு போன்ற உடலியல் பாதிப்புக்களும் ஏற்படுகின்றன.

கபடி, கிரிக்கட், கால்பந்து என ஓடி ஆடி உடல் வலுப்பெற விளையாடும் விளையாட்டுக்களே எமது உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றது. எம்மை அடிமைப்படுத்தும் தொழிநுட்பத்திற்கு ஆட்படாமல் சிறந்த விளையாட்டுக்களை நாம் விளையாட வேண்டும்.

முடிவுரை

நாம் விளையாடும் விளையாட்டானது எமது உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றதா என்பதனை உணர்ந்தே விளையாட்டில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலுக்கிணங்க சிறந்த விளையாட்டே ஆரோக்கிய வாழ்விற்கான வழியாகும்.

You May Also Like:

நாளைய உலகம் நம் கையில் கட்டுரை

இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை