அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த உலகில் பிறந்த அனைவருமே இயற்கையிலேயே சுதந்திரம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர் என்பதனை அடிப்படையாகக் கொண்டு இயற்கையும் சுதந்திரமும் பற்றியே பேசப்போகின்றேன்.
முன்னுரை
மனிதனுடைய வாழ்வில் இயற்கையானது பல்வேறுபட்ட சுதந்திரங்களை வழங்கியுள்ளது. பல்வேறு இயற்கை வளங்கள் எமக்கு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாகவே கிடைக்கப்பெறுகின்றன.
அதாவது காற்று, மழை நீர், சூரிய ஒளி இவை அனைத்தும் மனித தலையீடு இன்றி சுதந்திரமாகவே கிடைக்கப்பெறுகின்றன.
இயற்கையினூடாக கிடைக்கப்பெறும் அனைத்து வளங்களும் மனிதகுலத்தின் இருப்பை நிலைநிறுத்துவதாகவே காணப்படுகின்றன.
மனிதன் உயிர்வாழ்வதற்கான ஒட்சிசனானது இயற்கையினூடாகவே கிடைக்கப்பெறுகின்றது என்ற வகையில் சுதந்திரத்தினை வழங்குவதில் பிரதான பங்கினை இயற்கையே வகிக்கின்றது.
இயற்கைக்கும் சுதந்திரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு
இயற்கையாகவே படைக்கப்பட்ட உலகில் மனிதனானவன் உயிர் வாழ்வதற்கு சுதந்திரமான இயற்கையின் செயற்பாடுகளே பாரியளவு பங்களிப்பினை செய்கின்றது.
அதாவது இயற்கையும் சுதந்திரமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. ஏனென்றால் மனிதனானவன் சுதந்திரமான இயற்கையினூடாக அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்கின்றான்.
இயற்கையாகவே சுதந்திரமாக கிடைக்கப்பெறும் மழை நீரானது விவசாயத்திற்கு பாரியதொரு பங்களிப்பினை செய்கின்றது, தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான சூரிய ஒளி எவ்வித தடையுமின்றி சுதந்திரமாகவே எமக்கு கிடைக்கப்பெறுகின்றது என்பதினூடாக இயற்கையும் சுதந்திரமும் ஒன்றோடொன்று தொடர்புபட்ட விடயமாகவே காணப்படுகின்றன.
சுதந்திரமாக கிடைக்கப்பெறும் இயற்கை வளங்கள்
காற்று
சுதந்திரமாக எமக்கு கிடைக்கப்பெறக்கூடிய இயற்கை வளங்களில் ஒன்றே காற்றாகும். காற்றானது மின்சார உற்பத்தி, காற்றலைகள் என பல்வேறு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது.
காற்றினூடாகவே பல தாவரங்களின் விதைகளானவை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதோடு தாவரங்களின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
நீர்
மனித உயிர்வாழ்விற்கு அவசியமானதொன்றாகவே நீரானது காணப்படுகிறது. நீரின்றி மனிதனில்லை என்ற அடிப்படையில் நீரானது தன்னகத்தே பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. மனிதர்கள் மாத்திரமல்லாது உயிரினங்களின் விருத்திக்கும் நீரானது அவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது.
சூரிய ஒளி
சூரிய ஒளி இல்லையென்றால் மனித வாழ்க்கை இருண்ட இரவாகவே காட்சியளிக்கும் என்பததோடு தாவரங்களின் வளர்ச்சி, மனிதர்களின் உயிர்ச்சத்தான விற்றமின் டி, மின்சக்தி என பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சூரிய ஒளியானது பாரியதொரு பங்களிப்பினை செய்கின்றது.
இயற்கையின் சுதந்திரத்தை பாதுகாப்போம்
இயற்கையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது மனிதனாக பிறந்த எம் அனைவரினதும் கடமையாகும். ஏனெனில் இயற்கை சுதந்திரமாக காணப்படுகின்ற போதே மனித வாழ்வானது சிறப்பானதாக காணப்படும்.
இயற்கை சுதந்திரத்தில் பாதுகாப்பற்றதொரு நிலை ஏற்படுகின்ற போது எம்மை பல்வேறுபட்ட நோய்கள் தாக்குவதோடு மட்டுமல்லாது உலகையே அழிவு நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியதொரு நிலையும் ஏற்படும்.
மனிதனானவன் தனது பேராசையின் காரணமாக காடழிப்பில் ஈடுபடுகின்றான். இதன் காரணமாக சுத்தமாக கிடைக்கப்பெறும் காற்றானது தடைப்படுகின்றது. மேலும் ஓசோன் படை மாசடைதல், சூழல் மாசடைதல் என பல இயற்கை சீற்றங்கள் எம்மை வந்தடைகின்றன.
மனிதனானவன் இயற்கை சுதந்திரத்தை பாதுகாப்பவனாக இருக்க வேண்டுமே தவிர இயற்கையை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இயற்கையை பாதுகாக்கின்ற போதே மனிதனானவன் நோயற்ற சிறந்த வாழ்ககையை வாழ முடியும்.
இயற்கையின் சுதந்திரத்தை அழிக்கும் மனிதனோ அழிவை நோக்கியே பயணம் செய்வான் இயற்கையை பாதுகாக்கும் மனிதனோ மகிழ்ச்சிகரமான நோயற்ற வாழ்வை வாழ்வான்.
You May Also Like: