குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை

kulaththangarai arasamaram

வ.வே.சு.ஐயரினால் 1917 ஆண்டு எழுதப்பட்ட குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதையானது தமிழ் சிறுகதைகளின் முன்னோடி என விமர்சகர்களால் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும், விமர்சகர்களாலும் அக் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுகதைச் சுருக்கம்
  3. இச்சிறுகதையின் இலக்கியத்தரம்
  4. இக்சிறுகதை கூறும் நீதி
  5. சமூக, இலக்கியப் பயன்
  6. முடிவுரை

முன்னுரை

பன்மொழி பாண்டித்துயமும், தேசபக்தியும் கொண்டிருந்த வா.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் எனும் இச்சிறுகதையானது “விவேக போதினி” எனும் மாத இதழில் 1915 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் இதழ்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிவந்தது. இச்சிறுகதையின் போக்கு பற்றி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.

சிறுகதைச் சுருக்கம்

குளத்தங்கரையில் இருக்கும் ஓர் அரசமரம் தான் அறிந்த கதையைச் சொல்லும் பாணியில் இச்சிறுகதை அமைந்துள்ளது. அதாவது ருக்மணி எனும் 12 வயது சிறுமி நாகராஜன் என்பவனை திருமணம் செய்கிறாள்.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளினால் நாகராஜனின் குடும்பம் ருக்மணியை கைவிட முடிவெடுத்தனர். ஆனால் நாகராஜன் அவளை கைவிட நினைக்கவில்லை.

இச்செய்தி ருக்மணிக்கு சரியாக சொல்லப்படாததனால், அவள் குளத்தில் மூழ்கி உயிரை விடுகிறாள். நாகராஜனும் சன்னியாசியாகி விடுகின்றான் இதுவே இச்சிறுகதையின் சுருக்கமாக கொள்ள முடியும்.

இச்சிறுகதையின் இலக்கியத்தரம்

குளத்தங்களை அரசமரம் என்று அரசமரம் கதையை கூறுவது போல் இச்சிறுகதை அமைவதானது, படைப்பாளியின் புதிய உத்தி முறையை எடுத்துக்காட்டுகின்றது.

காவிய நயத்துடன் கருத்துக்களை முறையாக கூறி அக்காலத்தை சமூக சிக்கலை வெளிப்படுத்துவதையும் காணலாம்.

மேலும் கிராமங்களுக்கு உரிய பேச்சு வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்புறுதல் மற்றும் அறிவுறுத்தல்களுக்கும் இடமளிப்பதனால் இச்சிறுகதை இலக்கியத் தரம் வாய்ந்தது எனலாம்.

இச்சிறுகதை கூறும் நீதி

பெண்கள் மனதளவில் மென்மையானவர்கள் எனவே விளையாட்டுக்காக கூட அவர்களுக்கு துன்பம் எதுவும் செய்து விடக் கூடாது.

அவ்வாறு நிகழ்ந்தால் விளையாட்டு வினையில் முடிவதனையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே பெண்ணாய் பிறந்தவளை எந்த விதத்திலும் துன்பப்படுத்தக் கூடாது எனும் சமூக நீதியினை இச்சிறுகதை கூறுகின்றது.

சமூக, இலக்கியப் பயன்

குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதையானது பெண்களுக்கு வன்முறைகளும், கொடுமைகளும் நிகழ்ந்த காலத்தில் அவற்றை இல்லாது ஒழிப்பதற்கான சமூக அறிவுரையாக எழுதப்பட்டுள்ளமையானது சமூகத்துக்கு பயன் தருவதாகவே அமைந்துள்ளது.

மேலும் இச்சிறுகதை மக்கள் வாழ்வையும், காலத்தையும் உள்ளடக்கி அதன் மொழிநடை இலக்கியத்தரம் மற்றும் இரசனைக்கு வழி வகுத்து, காலம் காட்டும் கண்ணாடியாக அமைவதனால் இலக்கியப் பயனுடையதாகின்றது.

முடிவுரை

குளத்தங்கரை அரசமரம் எனும் இச்சிறுகதையானது ரவீந்திரநாத் தாகூரின் “கடேர் காதா” எனும் சிறுகதையின் தழுவலாக உள்ளது என பல விமர்சனங்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறு இருந்தபோதிலும் சமூகத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதி அளிக்கும் அறிவுரை பாங்கிலேயே இச்சிறுகதை அமைவதானது அதன் மகிமையை எடுத்துக்காட்டுகின்றது.

You May Also Like:

புயலிலே ஒரு தோணி கட்டுரை