இரவுக்குறி என்றால் என்ன

iravu kuri endral enna in tamil

ஐந்தினை ஒழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடத்தினை குறியிடம் எனலாம். இவ்குறியிடத்தில் ஒன்றே இரவுக்குறி ஆகும்.

இரவுக்குறி என்றால் என்ன

இரவுக்குறி என்பது இரவில் தலைவனும் தலைவியும் களவில் சந்தித்து கூடி மகிழும் இடமே இரவுக்குறி எனப்படும். அதாவது களவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த இரவுக்குறியானது நிகழும்.

இரவுக்குறியின் வகைகள்

இரவுக்குறியானது ஒன்பது வகைகளை கொண்டமைந்து காணப்படும். அவ்வகைகளை பின்வருமாறு நோக்கலாம்.

வேண்டல்

தலைவன் தலைவியை மீண்டும் சந்திக்க விழைந்து தோழியிடம் இரவுக்குறி வேண்டி பேசுதல் மற்றும் அச்செய்தியை தோழியிடம் கூறுதல் வேண்டல் ஆகும்.

மறுத்தல்

மறுத்தல் என்பது தோழியும் தலைவியும் தலைவனது வேண்டுகோளை மறுத்தலினையே இவ் இரவுக்குறி சுட்டிநிக்கின்றது.

உடன்படுதல்

உடன்படுதல் என்பது தோழியும் தலைவியும் தலைவனது வேண்டுகோளை ஏற்று இரவுக்குறிக்கு உடன்படுதல் ஆகும்.

கூட்டல்

தோழியானவள் தலைவியை அழைத்து சென்று இரவுக்குறிக்குறிய இடத்தில் விட்டு விடுவதே கூட்டலாகும்.

கூடல்

கூடல் என்பது தலைவனும் தலைவியும் இரவுக்குறி இடத்தில் கூடி மகிழ்வதை சுட்டிக்காட்டுகின்றது.

பாரட்டல்

இரவுக்குறியில் நிகழ்ந்த புணர்ச்சியின் பின் தலைவன் தலைவியை புகழ்தல் மற்றும் தலைவன் தந்த பரிசினை தோழி புகழ்தலினை சுட்டுவதே பாரட்டலாகும்.

பாங்கிற் கூட்டல்

தலைவனானவன் தோழியிடம் தலைவியை ஒப்படைக்க அவள் தலைவியை இல்லத்திற்கு அழைத்து செல்வதே பாங்கிகூட்டல் ஆகும்.

உயங்கல்

இரவுக்குறியில் சந்திப்பதற்கு தலைவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணி தலைவி வருந்துதல் அதனை கண்டு தலைவனும் வருந்துவதே உயங்கல் ஆகும்.

நீங்கல்

தோழியானவள் தலைவியை குறியிடத்தில் விட்டு நீங்குதலே இவ் இரவுக்குறியாகும். மேலும் தலைவன் தலைவியை கூடி பின் நீங்குதலையும் சுட்டுகின்றது.

இரவுக்குறி இடையீடு என்பது

இரவுக்குறி இடையீடு என்பது யாதெனில் தலைவன் தலைவியை சந்திப்பதில் தடங்கள் ஏற்படும் இதனையே இரவுக்குறி இடையீடு எனலாம். இரவுக்குறி இடையீடானது இரண்டு வகைகளாக காணப்படுகின்றது. அதாவது அல்லகுறி, வரும் தொழிற்கு அருமை என 02 ஆக காணப்படுகின்றது.

அல்லகுறி

தலைவனானவன் இரவுக்குறியில் தலைவியை சந்திக்க வருகையில் சில செயற்பாடுகளை மேற்கொள்வான். அதாவது தண்ணீரில் கல் எறிதல், பறவை போன்று ஒலி எழுப்பல், இளநீரை பறித்து கீழே போடுதல் போன்ற செயற்பாடுகளுள் ஏதேனுமொன்றை நிகழ்த்தி தலைவனானவன் தனது வருகையினை உறுதி செய்வான்.

அதை அறிந்து தலைவி குறியிடத்திற்கு சென்று கூடுவாள். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான செயற்பாடுகள் வேறு காரணத்தினால் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக தலைவி குறியிடத்திற்கு சென்று தலைவனை காணாமல் திரும்பிய சந்தர்ப்பங்களும் உண்டு. இதுவே அல்லகுறியாக காணப்படுகின்றது.

வரும் தொழிற்கு அருமை

தலைவியை காண்பதற்காக தலைவனானவன் இரவுக்குறியில் வருவான் அவ்வாறு வருகின்ற சந்தர்ப்பத்தில் இடையூறான நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதன்காரணமாக இரவில் சந்திக்கும் செயற்பாடானது அரிதாகவே இடம்பெறும். இதனையே வரும் தொழிற்கு அருமை எனலாம்.

எனவேதான் தலைவனானவன் இரவுக்குறியினை விரும்பக்கூடியவனாக காணப்படுவான். என்பதோடு தலைவியும் தலைவனும் இரவில் சந்திக்கும் ஓர் இடமாக இரவுக்குறியானது காணப்படுகிறது. இரவுக்குறியில் தலைவிக்கு உறுதுணையாக தோழி காணப்படுவது சிறப்பிற்குறியதாகும்.

மேலும் தலைவிக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளை தோழியானவள் மேற்கொள்கின்றாள். ஆகவேதான் இரவுக்குறி மூலமாக தலைவனும் தலைவியும் இரவில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சந்தித்து தனது மகிழ்வினை வெளிப்படுத்துகின்றனர். இதனூடாக களவானது நீடித்து காணப்படுகின்றது.

வரைவு என்றால் என்ன