ஏகாதசி என்றால் என்ன

ekadashi endral enna

இந்து சமயத்தவர்கள் பின்பற்றும் விரதங்களில் ஒன்றே ஏகாதசி விரதமாகும். ஏனைய விரதங்களை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விரதமாக ஏகாதசி விரதம் காணப்படுகிறது.

ஏகாதசி என்றால் என்ன

ஏகாதசி என்பது இந்துக்களின் கால கணிப்பின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிமுறையில் வருகின்ற ஒரு நாளையே ஏகாதசி என குறிப்பிடலாம். இதனை திதி என்றும் அழைப்பர்.

அதாவது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசி வருவதோடு அதனுள் ஒன்று அமாவாசையில் இருந்து 11வது நாளையும் மற்றொன்று பௌர்ணமியில் இருந்து 11வது நாளையும் குறிக்கின்றது.

ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதற்கான முறை

ஏகாதசி நாளில் தானியங்களினால் செய்யப்பட்ட உணவு வகைகளை உண்ணக்கூடாது. அதாவது குறிப்பாக சொல்லப்போனால் இட்லி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்டுள்ள உணவு மட்டுமல்லாது பலகார வகைகளையும் ஏகாதசி நாளில் உண்ணக்கூடாது. மேலும் சில பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பார்கள்.

ஏகாதசி நாளிற்கு முந்தைய நாளில் சூரிய அஸ்தமனத்திற்குள் உணவை உண்டு பின்னர் ஏகாதசிக்கு மறுநாளில் வைஸ்ணவ நாட்காட்டியில் காட்டிய நேரத்தின்படி ஏகாதசி விரதத்தை முடித்தல் வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பது போன்று அதனை குறித்த நேரத்தில் முடிப்பதும் முக்கியமானதொன்றாகும்.

ஏகாதசி விரதத்தினை இந்துக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் ஏகாதசி நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதும் மிகச் சிறந்ததாகும்.

ஏகாதசி விரதத்தின் சிறப்புக்கள்

ஏகாதசி நாளில் விரத முறையை பின்பற்றி வழிபாடுகளை மேற்கொள்வதானது உடல் மற்றும் உள தூய்மைக்கு வழிவகுக்கின்றது என்பதை ஏகாதசி விரதத்தின் சிறப்பாக கருதலாம்.

மேலும் ஏகாதசி விரதத்தின் மூலமாக எம்மை அறியாமல் நாம் செய்த பல்வேறு பாவங்களின் வினைப் பயன் போகும் என்பதோடு வாழ்வில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கி சிறந்த முறையில் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏகாதசி விரதமானது துணை புரிகின்றது.

இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவதற்கு ஏகாதசி விரதமானது துணை நிற்கின்றது. அதாவது இல்லற வாழ்க்கையில் பிரச்சினைகள் நீங்கி சுமூகமான நல்வாழ்வை வாழ்வதற்கான வழியினை ஏற்படுத்தி தருகின்றது.

உடல் ஆரோக்கியம் மற்றும் உளரீதியில் பக்தி உணர்வினை ஏற்படுத்தவும் இது துணை புரிகின்றது. மேலும் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல விதமான சௌபாக்கியங்களையும் பெற்று வாழக் கூடியவர்களாக காணப்படுவர்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேதயாகம் செய்த பலன்களை பெற்று கொள்வர். மேலும் ஏகாதசி விரதத்தினை கடைப்பிடிப்பவர்கள் பெருமாளுடைய அருளினை பெற்று சுபீட்சமான வாழ்க்கையினை வாழ்வார்கள்.

ஏகாதசி விரதத்தை பின்பற்றவதனூடாக மனிதர்களிடையே இருக்கும் எதிர்மறையான சிந்தனைகள் நீங்கி நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதற்கு வழியமைத்து தருகின்றது.

மேலும் பல்வேறு வகையான நோய்களில் இருந்து எம்மை பாதுகாக்கின்றது என்பதோடு இந்த விரதமானது ஏனைய விரதங்களை போல் அல்லாமல் பல்வேறு சிறபம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

You May Also Like:

பருப்பொருள் என்றால் என்ன

சதுப்பு நிலம் என்றால் என்ன