செவியறிவுறூஉ என்றால் என்ன

அறவோர் பிறருக்கு நல்ல நெறிகளை கற்பித்து நல்வழி நடக்க செய்யும் செயலாக இந்த செவியறிவுறூஉ காணப்படுகின்றது.

செவியறிவுறூஉ என்றால் என்ன

செவியறிவுறூஉ என்பது பாடாண் திணையில் பாடப்பெறும் ஆண்மகனின் ஒழுக்காறுகளை கூறும் ஒரு திணையாகும். அதாவது அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது செவியறிவுறூஉ துறையாகும். இங்கு செவியறிவுறூஉ எனப் பெற்றது இத்துறையின் பெயராகும்.

செவியறிவுறூஉ துறை சான்று
காய் நெல் அறுந்த கவளம் கொளினே,
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறு செறு ஆயினும் தமிதுப்புக்கு உண்னே
வாய்புகுவதினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடைய வேந்தன் நெறி அறிந்து கொளினெ
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்
யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகும் கெடமே,

பொருள்:

ஒரு மாவிற்கு குறைந்த நிலமயினும் அதன் கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கி கவளமாக கொடுத்தால் யானைக்கு பல நாட்களுக்கு உணவாகும். அப்படி அல்லாமல் நூறுமடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்து சென்று வயலில் புகுந்து உண்னுமாயின் அதன் வாயில் புகும் நெல்லை விட அதனுடைய காலால் மிதிபட்டு அழியும் நெல்லே அதிகமாக காணப்படும். அதுபோல வரி திரட்டும் அரசனானவன் மக்களின் நிலையறிந்து வரி திரட்டினால் நாடு சிறப்பினை அடையும் அவ்வாறல்லாது சுற்றத்தோடு சேர்ந்து குடிமக்களை வருத்தி வரி திரட்டினால் யானை புகுத்த வயல் போல் தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது துன்புறுவர்.

துறை பொருத்தம்:

அதாவது செவியறிவுறூஉ துறையானது பாண்டியன் அறிவுடைய நம்பிக்கு வரி திரட்டும் முறைகளை அவர் கேட்கும் படி கூறியிருப்பதால் இப்பாடல் இத்துறையுடன் பொருந்தியுள்ளது.

இலக்கியம்:

செவியறிவுறூஉ துறை பாடல்கள் புறநாநூற்றில் 8 உள்ளதோடு அவை பாடத்திணையின் பாற்பட்டவை ஆகும். அந்த வகையில் செவியறிவுறூஉ துறையின் சில விளக்கங்கள் வறுமாறு.

கறந்த பால் புளித்தாலும் பகல் இருளாக காணப்பட்டாலும் நீயும் உன் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப்போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கிய கொடை உள்ளம் மாறாமல் இருப்பீராக.

அருளும் அன்பும் நீக்கியோர் நிரயம் கொள்வர். அவர்களோடு நீ சேராதே! தாய் தன் குழந்தையை பேணுவது போல் நாட்டு மக்களை காப்பாயாக

உலகமே மாறினாலும நீ சொல் தவரதே! உன்னை நாடி இரவலர் வரும் போது அவர்களின் குறிப்பறிந்து கொடு. போன்ற விளக்கங்களினூடாக செவியறிவுறூஉ துறையானது அரசனிற்கு அவருடைய கடமைகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளது.

செவியறிவுறூஉ துறையின் சிறப்புக்கள்

அரசனிற்கு அறிவுரை கூறுவதாக பாடப்படுவது இந்த செவியறிவுறூஉ துறையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக “காய் நெல்” பாடலடியின் ஊடாக காணப்படுகின்றது.

அரசனின் கொடைத்தன்மை வீரம் போன்றன இத்;துறையினூடாக பாடப்பட்டுள்ளமை. அதாவது போரில் இருபாற் வீரர்களுக்கு பொருஞ்சோறு வழங்கிய கொடை உள்ளம் கெண்டவர் என்பதினூடாக கொடைத்தன்மை விளக்கப்படுகின்றது.

நாட்டின் பொருமையினை எடுத்து கூறுவதாக காணப்படுகின்றது. அதாவது நெல்வளம் நிறைந்து காணப்படும் நாடாகும் என்பதினூடாக நாட்டின் பொருமையினை எடுத்தியம்புகின்றது.

நற்பயன்களை ஏற்படுத்தும் கருத்துக்களை மன்னனுக்கு பாடலடிகள் ஊடாக குறிப்பிடுவதானது இத்துறையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் உவமைகளை கையாண்டு ஒப்பீட்டு ரீதியில் மன்னுக்கு அறிவுரைகள் வழங்குதல் போன்றனவாகும். எனவே பாடாந்திணையில் ஓர் சிறந்த துறையாக செவியறிவுறூஉ துறை காணப்படுகின்றது.

You May Also Like:

நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை

நற்செயல் என்றால் என்ன