நடிகர் பிரதீப் மாரடைப்பால் உயிரிழப்பு!

தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் கழிவறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கபட்டார்.

இந்நிலையில், நேற்று (12) முதல் இவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை நடிகராக நடித்துவந்த பிரதீப், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத இவர் சென்னையில் பலவாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.

இவருடைய நண்பர்கள் இரண்டு நாட்களாக இவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து வந்த நிலையில் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவருடைய வீடு உள்புறமாக பூட்டி இருந்தது.

இதனால் பதற்றம் அடைந்த நண்பர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த விடுக்க அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் கழிவறையில் உயரிழந்த நிலையில் மீட்கபட்டார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

more news