முற்போக்கு சிந்தனையானது ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு துணை புரிகின்றது.
முற்போக்கு சிந்தனை என்றால் என்ன
முற்போக்கு சிந்தனை என்பது யாதெனில் ஒரு விடயத்தை செய்வதற்கான புதிய வழிகளை கண்டறிந்து அதனை மேற்கொள்தலே முற்போக்கு சிந்தனையாகும்.
முற்போக்கு சிந்தனையை உடையவர்கள் நேர்மறை சிந்தனையை உடையவர்களாகவே காணப்படுவர். முற்போக்கு சிந்தனையினை உடையவர்கள் சமூகத்தில் மாற்றத்தினையும், சமூக மேம்பாட்டினையும் விரும்ப கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.
முற்போக்கு சிந்தனையும் நேர்மறை எண்ணங்களும்
முற்போக்கான சிந்தனைக்கு அடித்தளமாக நேர்மறை சிந்தனை காணப்படுகின்றது. அதாவது பல மாற்றங்கள் மற்றும் புதிய வழிகளை ஏற்படுத்துவதற்கு நேர்மறை சிந்தனை அத்தியவசியமானதாகும்.
நம்பிக்கையுடையவர்கள் சிறந்த விளைவுகளை எதிர்பார்க்க கூடியவர்களாகவும் நேர்மறையான அணுகுமுறைகளையும் கொண்டவர்களாகவும் காணப்படுவர்.
நேர்மறையான எண்ணத்தினூடாக சுய நம்பிக்கை மற்றும் வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பல்வேறு வழிகள் பிறக்கின்றன. மேலும் நேர்மறை எண்ணமானது ஒரு சிறப்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு துணைபுரிகின்றது.
எமது இலட்சியத்தை அடைவதற்கு முற்போக்கான சிந்தனைகளில் ஒன்றான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒன்றாகவே நேர்மறை எண்ணங்கள் காணப்படுகின்றன.
முற்போக்கு சிந்தனையாளர்களின் பழக்கவழக்கங்கள்
சிறந்த விடயங்களை தேடக்கூடியவர்களாக காணப்படுவார்கள். அதாவது ஒரு வியாபாரமோ அல்லது கல்வி நடவடிக்கைகளிலோ சிறந்த முறைமையினேயே பேணுவார்கள். முற்போக்கு சிந்தனையுடன் காணப்படுபவர்கள் தெளிவான சிறந்த விடயங்களை தேடி பெற்றுக்கொள்வார்கள்.
தீர்வை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தக் கூடியவர்களாகவே காணப்படுவார்கள். அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்றாலும் அதனை பற்றி சிந்திக்காது தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
சிறந்த கேள்வியினை எழுப்பக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். விடயம் ஒன்றை ஆராய்ந்து அது பற்றி நாம் என்ன செய்துள்ளோம், எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் போன்றவை தொடர்பாக புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை காணப்படும். அதாவது முற்போக்கு சிந்தனையாளர்கள் மாறவோ, முன்னேறவோ தயங்க மாட்டார்கள். விளைவுகள் எவ்வாறாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள கூடியவர்களாகவே காணப்படுவர்.
முற்போக்கு சிந்தனையில் நேர்மறை எண்ணங்கள் செல்வாக்கு செலுத்துவதற்கான காரணங்கள்
நம்பிக்கையினை அடிப்படையாக கொண்டு இலட்சியத்தை அடைவதற்கு நேர்மறை சிந்தனை அவசியமானதாகும். எதிர்மறையான சிந்தனையின் மூலம் இலட்சியத்தை அடைய முடியாத நிலையே ஏற்படும்.
எண்ணங்களை சிறந்த முறையில் வளர்ப்பதன் மூலம் எமது வாழ்க்கையினை சிறப்பாக வாழ்வதற்கான புதிய வழிகளை கண்டறிந்து செயற்பட முடியும்.
எப்பொழுதும் நேர்மறையான சுயபேச்சு அவசியமானதொன்றாகும். ஏனெனில் இதன் மூலமாக ஒரு விடயத்தில் வெற்றியினை பெற்றுக்கொள்வதற்கு உந்து சக்தியாக நேர்மறை சிந்தனை காணப்படுகிறது.
சவால்களை எதிர்கொள்ளவும் தேவையற்ற விடயங்களில் இருந்து தாம் விலகி முற்போக்கு சிந்தனையோடு செயற்படவும் நேர்மறை சிந்தனை அவசியமாகின்றது.
மேலும் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஏற்படுவது நேர்மறை எண்ணங்களால் மாத்திரமே ஆகும். இதனூடாக மன அழுத்தம் குறைவதோடு கவலைகள், துன்பங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி எமக்கு கிடைக்கிறது. மேலும் எமது வாழ்க்கையை மேம்படுத்தி முற்போக்கு சிந்தித்து செயற்பட நேர்மறை எண்ணங்களே துணை செய்கின்றது.
எனவேதான் மாற்றத்தினை ஏற்றுக் கொள்ளவும், புதிய ஆக்கத்திறனான சிந்தனை உடையவராகவும் திகழ முற்போக்கு சிந்தனையானது அவசியமானதாகும். முற்போக்கு சிந்தனையின் அடித்தளமாக நேர்மறை சிந்தனையானது காணப்படுகின்றது. ஆகவேதான் சிறந்த வாழ்க்கைக்கு முற்போக்கு சிந்தனை முக்கியமானதாகும்.
You May Also Like: