தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் தற்பொழுது தமிழக வெற்றிகழகம் எனும் பெயரில் கட்சி அரம்பித்துள்ளார்.
2026 ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட உள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்பது யாருமே எதிர்பார்க்காத விடயம்.
இவர் அரசியலுக்குள் வர போகின்றார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அது வதந்தி என்று கூறினர்.
லியோ படத்தினை முடித்த பின்னர் தான் அரசியல் வருகையை அதிகார பூர்வமாக அறிவித்தார்.
தற்போது அரைநேர அரசியல் வாதியாக இருக்கும் விஜய் தளபதி 69 இற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறவுள்ளார்.
தளபதி 69 பின்னர் அவர் முன்னாள் நடிகர் என்ற பெயர் தான் இருக்கும் . இவரின் இந்த முடிவை பார்த்து ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.
விஜய்யின் இறுதி படமான தளபதி 69 இற்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றது.
இவ்வாறு இருக்க விஜயின் அரசியல் வருகையை பல பிரபலங்களும் விமர்சித்து நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அருண்குமாரும் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகர் பீக்கில் இருக்கும்போது அரசியலுக்குள் வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு ரிட்டையர்ட் வயதில் இருக்கும்போதோ அல்லது மார்க்கெட் முழுவதும் சரிந்த நிலையிலோ அரசியலுக்கு வருவார்கள்.
ஆனால் விஜய்யை பொறுத்தவரைக்கும் அவருடைய மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது.
இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதை நான் மிகவும் வரவேற்கிறேன். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கும் அவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்திருக்கிறது.
அவருடன் நிறைய தடவை சண்டை போட்டிருக்கிறேன். இருந்தாலும் அவருடைய இந்த அரசியல் வருகையை நான் சந்தோஷமாக வரவேற்கிறேன் என கூறி இருக்கிறார்.