சூரி நாட்டிப்பில் கருடன் படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகியது. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சூரி, சசிகுமார், உன்னிமுகுந்தன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இயக்குனர் துரை செந்தில் இந்த படத்தில் யார் ஹீரோ, நாம் யாருடைய நடிப்பை தொடரவேண்டும் என்பதை அழகாக கூறியிருப்பார். நாம் சூரியை தான் போலோ செய்யவேண்டும் என்பதை இடைவேளை காட்சியில் மிகவும் நன்றாக கூறியிருப்பார்.
கருடன் படம் ஒரு ஆக்ஷன் படமாக அமைந்திருப்பதால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. விஷ்வாசம், நியாயம் இரண்டுக்கும் நடுவில் சூரி. இவர் எந்த பக்கம் நிக்க போகின்றார் என்பதே கதை ஆகும்.
இப் படத்திற்கு பிளஸ் ஆன விடயமாக சசிகுமாரின் நடிப்பு, ஒரு நல்ல நண்பன் என்பது இவர் நடித்த முன்னைய படங்கள் காட்டிவிட்டன. இதனால் இந்த படத்தில் அந்த பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இவர் இருப்பது ஆகும்.
இந்த படத்தின் மைனஸ் அடுத்து என்ன வரும் என்பதை படம் பார்ப்பவர்களால் ஊகிக்க முடிந்தது ஆகும். அனைவரும் இதை தான் எதிர்பார்பார்கள் என்றால் அதை மாற்றி இருந்தால் இப் படம் என்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இவ்வாறு இருக்க சமூக வலைதளங்கள் அனைத்திலுமே இன்று சூரியை பற்றி பேச்சு தான். இவர் வீட்டு கஷ்டத்தினால் இடையில் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்.
சென்னைக்கு வரும் போது வீடு வாங்க பணம் கொடுத்து ஏமாந்து விட்டார். பின்னர் குடிசை வீட்டில் வாழ்ந்து கிடைக்கின்ற வேலைகள் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டார். அதன் பின்னர் தான் சினிமாவிற்குள் வந்து இன்று உயர்ந்து நிக்கின்றார்.
இவ்வாறு இருக்க மூன்றாம் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. முதல் நாள் 3 கோடியும், இரண்டாம் நாள் 4.5 கோடியும், மூன்றாம் நாள் 6.25 கோடியையும் வசூலித்துள்ளது.