இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாறு கட்டுரை

india suthanthiram adaintha varalaru

இந்தியா தேசமானது இன்று சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றது என்றால் அதற்கான பிரதான காரணம் பல தியாகிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் ஆகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆக்கிரமிக்க வந்த அந்நிய நாட்டவர்கள்
  • சுதந்திர வேட்கையின் ஆரம்பம்
  • சுதந்திர போராட்ட தியாகிகள்
  • இந்தியா சுதந்திரம் அடைதல்
  • முடிவுரை

முன்னுரை

1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா பல போராட்டங்களால் சுதந்திரமடைந்தது. சுதந்திரம் அடைந்த நாளானது அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்ததொரு நாளாகும். பல வருட போராட்டங்களுக்கு பிறகு ஆங்கிலேயரிடமிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியாவானது சுதந்திரத்திற்காக பல தியாகங்களை கொடுத்துள்ளது.

ஆக்கிரமிக்க வந்த அந்நிய நாட்டவர்கள்

இந்திய தேசமானது பல இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டு காணப்பட்ட காரணத்தால் உலகின் பல பாகங்களிலிருந்தும் அந்நிய நாட்டவர்கள் படையெடுத்து வந்தனர்.

இவ்வாறாக போர்த்துக்கேயருடைய ஆட்சி இந்தியாவில் காணப்பட்ட போது இவர்களை விரட்டி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்தி கொண்டதோடு மட்டுமல்லாது ஆங்கிலக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி ஒன்றை உருவாக்கி தனது ஆட்சியை ஸ்திரப்படுத்தினர்.

இவர்களிடம் ஆயுதப்பலம் அதிகமாகக் காணப்பட்டதன் காரணமாக இந்திய அரசுகள் ஆங்கிலேயருக்கே அடிபணிந்து செயற்பட்டது.

சுதந்திர வேட்கையின் ஆரம்பம்

இந்திய நாட்டில் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலங்களில் மன்னராட்சி இடம்பெற்றதோடு இக்காலப்பகுதிகளில் ஆங்கிலேயர் வரி வசூலித்தும் வந்தனர். மேலும் வரி தர மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கினர். இத்தகையதொரு சூழலில் மன்னர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்.

இவ்வாறாக காணப்பட்ட சூழலில் ஆயுத வழிகளில் மட்டும் போராடினால் போதாது என்ற நோக்கில் மக்கள் செயற்பட்டனர்.

மேலும் காந்தி அவர்களே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புதுமையான மாற்றங்களை நிகழ்த்தியவராவார். அதாவது அகிம்சை வழியில் போராட்டங்களில் ஈடுபட்டார்.

போராட்டங்களை தடுக்க ஆங்கிலேயர்கள் முயன்ற போது இந்திய தேசத்தின் போராட்ட வீரர்கள் மனம் தளராது தனது இந்திய தேசத்திற்காக போராடினார்கள். இதில் ஜாலியன் வலாபக் என்ற சரித்திர சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்து இந்தியர்களும் சுதந்திர தாகத்திற்காக போராடியமை மக்களின் சுதந்திர வேட்கையினை எடுத்துக்காட்டுகின்றது.

சுதந்திர போராட்ட தியாகிகள்

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்ட தியாகிகள் போராடினார்கள். அந்த வகையில் அகிம்சை வழியில் போராடிய வீரர்களுள் ஒருவரான மகாத்மாகாந்தி அவர்களின் உப்பு சத்தியக்கிரக போராட்டம் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நேதாஜி ஆயுத வழியில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியமை மற்றும் நேரு, ராஜாஜி, பகத்சிங் போன்றவர்களும் தென்னகத்தில் பாரதியாரும், வஞ்சிநாதன் போன்றோரும் நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

இந்தியாவானது பல போராட்டங்களுக்கு பின்னர் 1947ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னராக இருந்த ஜெனரல் விஸ்கவுன்ட் லூயிஸ் மவுன்பேட்டன் அவர்களால் ஜுன் 3ம் திகதி அன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் காணப்பட்ட இந்தியா பேரரசை மதச்சார்பற்ற இந்தியாவாகவும், முஸ்லிம் பாகிஸ்தானாகவும் பிரிப்பதாக அறிவித்தார்.

இப்பிரிவினையின் காரணமாகவே 1947ம் ஆண்டில் பாகிஸ்தான் தனிநாடாக உருவாகியது. இதனை தொடர்ந்தே 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தேசமானது சுதந்திரமடைந்தது.

சுதந்திரம் அடைந்ததோடு ஒவ்வொரு ஆண்டும் 15ம் திகதி இந்திய சுதந்திர தின விழாவானது கொண்டாடப்பட்டு வருகின்றது.

முடிவுரை

பல்வேறு போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் மத்தியில் கிடைக்கப்பெற்ற இந்திய மண்ணின் சுதந்திரத்தை அனைவரும் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் தேசப்பற்றினையும் வளர்த்தக்கொள்வதே நாம் எமது தாய் நாட்டிற்கு செய்யும் கடமையாகும்.

You May Also Like:

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை

விண்வெளியில் இந்திய சாதனைகள் கட்டுரை