மங்களம் என்பதானது தமிழர்களின் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவதானது சிந்து சமவெளி காலம் தொடக்கம் இன்று வரை தொடருகின்ற மரபாகும்.
மண் என்ற சொல்லும் கலம் என்ற சொல்லும் சேர்ந்து வரும் மங்கலமே பிற்பட்ட காலங்களில் மருவி மங்களமாகியது. சிறந்த நாளை மங்களகரமான நாள் என்று தான் அதிகமாக கூறுவார்கள். நல்ல நிகழ்வுகளின் போது மங்களம் பெருகட்டும் என வாழ்த்துவது மரபாகும்.
மங்களம் வேறு சொல்
- சுபம்
- நிறைவு
- நல்வாழ்வு
- பொலிவு
- மகிழ்ச்சி
மங்களப் பொருட்கள்
மங்களப் பொருட்களில் முதன்மையான பொருளே மஞ்சளாகும். இது சகல சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயிலில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்துவதிலும் முதலிடமாக திகழ்கின்றது. மங்களம் எனும் சொல்லானது வள்ளுவர் காலத்தில் இருந்து புழக்கத்தில் உள்ளதொரு சொல்லாக காணப்படுகின்றது.
மங்களம் பாடுதல்
நல்ல காரியங்களின் முடிவில் பாடப்படுவதே மங்களம் பாடுவதாகும். மண மக்களுக்கு ஆசி கூறுவதனை மங்கள வாழ்த்து என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சுப காரியங்களை மேற்கொள்ளும் போது மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமாகும். இவ்வாறாக மங்களம் பாடுதலானது சிறப்பானதொன்றாகும்.
You May Also Like: