லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த சிம்பு குழந்தை நச்சத்திரமாக இருந்து காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். இவர் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமான படம் உறவை காத்த கிளி ஆகும்.
இவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.
குறிப்பாக பத்து தல படத்தில் நடித்தது சிம்புதனா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இவரின் நடிப்பு இருந்தது. பத்து தல படத்திற்கு பின்பு அவரை கேலி செய்தவர்கள் எல்லாம் அவரின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இவரை தக் லைஃப் படத்திற்கு தெரிவு செய்தமைக்கான காரணம் இவர் நடித்த செக்க சிவந்த வானம் படம் தான். காதாநாயாகனே இல்லாமல் எடுக்கபட்ட படமென்றால் அது செக்க சிவந்த வானம் தான்.
இப்படத்தில் சிம்பு ஒரே டேக் இல் நடித்து முடித்தமை தான் இயக்குனர் மணிரத்னத்தின் கண்ணில் அகபட்டமைக்கு காரணம்.
தக் லைஃப் கமல், மணிரத்னம் ஆகிய இருவரும் நீண்ட இடைவேளைக்கு பின் இணையும் படம் ஆகும். இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.
தேர்தலால் கமலின் கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்தில் நடிக்கவிருந்த ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் விலகி பின் மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் துல்கர் சல்மான் மட்டுமே விலகியதாகவும் அவருக்கு பதிலாக சிம்புவை கொண்டு வந்ததால் சிம்பு நடிக்கும் படங்களில் நான் நடிக்கமாட்டேன் என்று ஜெயம் ரவி விலகியதாகவும் சமுகவலைத்தளங்களில் தகவல் கசிந்தது.
ஆனால் அது பொய்யானது என்பதை மீண்டும் அவர் வந்து நிரூபித்து விட்டார்.
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இவர்கள் இருவரும் சிம்புவை இப்படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டாம் என்று மணிரத்தினத்திடம் பேசியுள்ளனர்.
தங்களது பண பிரச்சனையை சரி செய்யாமல் சிம்புவை தக் லைஃபில் நடிக்க விட மாட்டோம் என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது பெப்சி தொழிலாளர்களை சிம்பு நடிக்கும் திரைபடத்தில் வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் இப்படம் முழுமையாக நிறைவேறுமா என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.