புறநானூறு எனப்படுவது 400 பாடல்களை கொண்டமைந்த புறத்தினை சார்ந்த சங்க தமிழ் நூலகும். இந்த புறநானூறானது 4 அடி முதல் 40 அடி வரையான ஆசிரியப்பாவால் அமைந்து காணப்படுகின்றன.
மேலும் இது சங்க காலத்தில் காணப்பட்ட அரசர்கள் மற்றும் அவர்களது சமூக வாழ்க்கை சார்ந்த விடயங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றன. இந்நூலில் உள்ள பாடல்களானவை பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
புறநானூறு வேறு பெயர்கள்
- புறம்
- புறம்பாட்டு
- புறம்பு நானூறு
- தமிழர் வரலாற்று பெட்டகம்
- தமிழர் களஞ்சியம்
- திருக்குறளின் முன்னோடி
- தமிழ்க் கருவூலம்
புறநானூற்றில் சமூக நிலை வெளிப்படும் விதம்
புறநானூறானது அக்கால சமூக நிலையை காட்டும் ஓர் கண்ணாடியாகவே காணப்படுகின்றது. அதாவது பெண்கள் மங்கல அணி அணிதல், நடுகல் தட்டல், கணவனை இழந்த பெண்கள் கைம்பை நோன்பு நோற்றல், உடன் கட்டையேறுதல், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் என பெண்களின் வீரத்தை எடுத்தியம்புவதோடு சங்ககால சமூக நிலையினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
புறப்பாடல்களும் புற ஒழுக்கங்களும்
புறப்பாடல்களானவை போர்த் திறன் மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு, வள்ளல் தன்மை போன்ற புற ஒழுக்கங்களை எடுத்தியம்பக்கூடியதாகவே காணப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையில் புற ஒழுக்கம் சார்ந்த பாடல்களை தன்னகத்தே கொண்டமைந்து திகழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: