கருடனின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறிய சசிகுமார்!

சூரி நடிப்பில் துரை செந்தில் இயக்கத்தில் கடந்த 31 ம் திகதி கருடம் படம் வெளியானது. வெளியாகி இன்று வரைக்கும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

இப் படத்தில் மூன்று முக்கிய நாயகர்களை வைத்து கதையை கொண்டு போகின்றார் இயக்குனர். சூரி ஹீரோவாக நடித்திருந்தாலும் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரையும் ஒரு ஹீரோ மாதிரி காண்பித்திருப்பார். இருந்தாலும் இடைவேளை காட்சியில் ரசிகர்கள் சூரியை போலோ செய்ய வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருப்பார்.

நண்பனுக்கு துரோகம் செய்யும் ஒருவர், அவருக்கு விசுவாசியாக ஒருவர், இந்த விசுவாசி அதை பார்த்ததும் என்ன செய்ய போகின்றார்; அதாவது உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் நல்ல நண்பர்கள், சூரி உன்னிமுகூந்தனின் விசுவாசி, உன்னி முகுந்தன் சசிக்குமாரை சொத்திற்காக கொலை செய்கின்றார்.

இதை அறிந்த சூரி நியாயத்தின் பக்கம் நீக்கின்றாரா? இல்லை விசுவாசத்திற்காக உன்னி முகுந்தனுக்கு ஆதரவாக நீக்கின்றாரா? என்பதே கதை.

இப் படத்திற்கு நல்ல விமர்சனகளே கிடைத்து வருகின்றது. 3 நாட்களில் மட்டும் 15 கோடி வசூல் செய்துள்ளது. மற்றும் சூரியின் வாழ்க்கையை இந்த படம் உயர்த்தி விட்டது.

அதுமட்டுமல்லாது சூரி நடித்த விடுதலை 1 மற்றும் 2, கொட்டுக்காளி படங்கள் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்பட்டன. பெர்லின் திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் போட்டி போட்டது. ஒரே ஆண்டில் 3 படங்கள் இப்படி தேர்வாவது பெரிய விஷயம் என சூரி பேசியுள்ளார்.

மற்றும் கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சசிகுமார் தனது டுவிட்டர் தளத்தில் கருடன் படத்தை வெற்றி படமாக மாற்றி கொண்டாடுவதற்கு நன்றி கூறியும் உள்ளார்.

more news