மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம்கடந்த வெள்ளி கிழமை வெளியானது. இந்த படத்திற்கு நேர்மறையான கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் சினிமாவில் எல்லாதரப்பு ரசிகர்களையும் கொண்ட நடிகர்களின் பெயர் பட்டியல் எடுத்தால் அதில் விஜய் சேதுபதியின் பெயர் நிச்சயமாக இருக்கம்.
இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பின்னர் நானும் ரௌடி தான் , விக்ரம் வேதா, சேதுபதி, இறைவி , 96 போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். 96 அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த காதல் கதையாக இருந்தது. இந்த அபடத்திற்கு பின்னர் விஜய் சேதுபதி, திரிஷா என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.
நடிகர்களின் வாழ்க்கையில் 50 வது படம் என்பது ஒரு முக்கிய படமாக பார்க்கின்ற நிலையில் இதுவரை பெரியளவில் அவர்களின் 50 வது படம் வெற்றியை கொடுத்ததில்லை.
இவ்வாறு இருக்க விஜய் சேதுபதியின் 50 வது படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அனைத்து பெரிய பெரிய திரையரங்குகள் எல்லாம் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றது. இப் படத்திற்கு பற்றி சீட்டு கிடைப்பது ரொம்பவே கடினம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க முதல்நாள் 7 கோடியும் இரண்டாம் நாள் 8 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் செய்துள்ளது.
மூன்றாம் நாள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மூன்று நாட்களில் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.