விஐய் மக்கள் இயக்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த விஐயின் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஐய் தனது சமூக வலைத்தளப் பக்கம் அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
வெற்றி கழகம் or வெற்றிக் கழகம்
வெற்றி கழகம் or வெற்றிக் கழகம் இதில் வெற்றிக் கழகம் என்பதே தமிழ் இலக்கண விதிப்படி சரியானதாகும்.
விஜய் தனது அறிக்கையில் கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தக் கட்சி தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குறிப்பாக விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதை அடுத்து புதுக்கோட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், ஓசூர், சிதம்பரம், பழனி, விருத்தாச்சலம், காரைக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் அவரது ரசிகர்கள் பட்டாசு கொளுத்தியும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.
மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்கைகள் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் தனது கட்சிக்காக வடிவமைக்கப்படும் என வெற்றி கழக கட்சியின் தலைவராகக் கூறியுள்ளார்.
கடந்த ஐனவரி 25 ஆம் திகதியன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும், செயல்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும், தலைமைச் செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியரமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழக வெற்றி கழக அறிக்கை
“பிறப்பெராக்கும் எல்லா உயிர்க்கும்” என்று விஜய் புகைப்படத்தை மையப்படுத்தி அறிக்கை தொடங்குகின்றது. அதில் “அன்பான தமிழ் மக்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்” என்று அறிக்கை தொடங்குகின்றது.
தன்னார்வலர்களாக விஜய் ரசிகர்கள் மற்றும், மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்கள் சார்ந்த பல பணிகளை செய்து வந்துள்ளோம். அதையும் தாண்டி அரசியல் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அந்த அரசியல் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு பல நலத்திட்ட உதவிகளும், பல சீர்திருத்தங்களையும் செய்வதற்காகவே இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பல அரசியல் மாற்றங்களை விரும்புகின்றார்கள். அந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே இந்த தமிழக வெற்றி கழகமானது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகமானது மக்களின் வெற்றிக்காக அரும்பாடுபடும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. நமது இலக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே எனக் குறிப்பிட்டுள்ளார். 2026ல் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே நமது இலக்கு.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயற்திட்டங்களை முன்வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகின்றேன். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளைக் கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபட உள்ளேன்.
அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யப் போகும் நன்றி கடனாக கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையகத்திற்கு சென்ற தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிய விண்ணப்பித்தார்.
You May Also Like: