இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் தலைமுடி காணப்படுகின்றது என்ற வகையில் தலைமுடி என்பது அடித் தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளர்ந்து வருகின்ற இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயிரியப் பொருளாகும்.
அதாவது மெல்லிய நுண்ணறை கீழே ஒரு வேர் போன்ற அமைப்பில் இருந்து தலைமுடியானது வளருகின்றது அந்த வகையில் எமது உச்சந் தலையில் காணப்படும் இரத்த நாளங்களிலிருந்து வரும் இரத்தமே வேருக்கு உணவளிக்கின்றதோடு இதுவே அதிக செல்களை உருவாக்கி எமது தலைமுடி வளர்வதற்கும் துணை புரிகின்றது.
தலைமுடியானது அனைவருக்கும் ஒரே மாதிரியாக காணப்படாது அந்த வகையில் சுருட்டை முடி, கோரை முடி என பலவாறாக காணப்படுகின்றது.
தலைமுடி வேறு பெயர்கள்
- மயிர்
- முடி
- கேசம்
- சிகை
- கூந்தல்
You May Also Like: