தொலைபேசி தீமைகள் கட்டுரை

tholaipesi theemaigal katturai in tamil

தற்கால நவீன சமூகங்களில் மக்களின் ஒரு இறுக்கமான நண்பனாகவே தொலைபேசி மாறிவிட்டது. அதாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனியான கைத்தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என தனித்தனியான தொலைபேசிகளை கொண்டிருப்பதனால் குடும்ப உறவுகளுக்கு இடையில் காணப்படும் வலுவினை விட, குடும்ப உறுப்பினர்களுக்கும் தொலைபேசிக்கும் இடையிலான பிணைப்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

தொலைபேசி மூலம் அதிகமான நன்மைகள் கிடைக்கப்பெறினும், அதே அளவு தீமைகள் இருப்பதனையும் நாம் உணர வேண்டியுள்ளது.

தொலைபேசி தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சமூகச் சீர்கேடுகள்
  • உடலியல் ரீதியான தாக்கங்கள்
  • உளவியல் ரீதியான தாக்கங்கள்
  • தொலைபேசி கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

நவீன யுகத்தில் தொலைவில் இருக்கும் ஒருவரை தன் அருகாமை உணர வைக்கக்கூடிய ஒன்றாகவே இந்த தொலைபேசி காணப்படுகின்றது.

தொலைபேசியின் மூலம் மனிதன் பல்வேறு வகையிலும் பல்வேறு நன்மைகளை அடைகின்ற போதிலும் அதனை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமும், தகாத முறையில் பயன்படுத்துவதன் மூலமும் சமூகத்தில் பல்வேறு தீமையான விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றது.

தொலைபேசி பாவனையின் தீமைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சமூகச் சீர்கேடுகள்

இன்றைய இளைஞர் சமூகத்தில் தொலைபேசி என்பது உடல் உறுப்புகளுடன் ஒன்று போல் ஆகிவிட்டது. தொலைபேசி இல்லாத ஒரு இளைஞனை காண்பதே மிகவும் அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது.

பல இளைஞர்கள் இன்று இணையதளம் மூலமாக மோசடி, மிரட்டல், இணைய வழி துஷ்பிரயோகம், மற்றும் இணைய வழி திருட்டு போன்ற பல்வேறு சமூகத்தை சீரழிக்க கூடிய நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அத்தோடு ஆபாச தளங்களிலும் அதிகமாக நேரத்தை செலவழிப்பதனால் சமூகத்தில் இளைஞர்களின் நன்னடத்தைகள் சீரழிவதை காணலாம்.

ஆண் பெண் என அனைவரும் இந்த தொலைபேசி பாவனை மூலம் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும், சிக்கல்களையும் சந்தித்த வண்ணமே உள்ளனர்.

உடலியல் ரீதியான தாக்கங்கள்

தொலைபேசி பாவனை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களிடத்தில் ஏற்படக்கூடிய உடலியல் ரீதியான தாக்கங்களை நோக்குமேயானால்,

  • தொலைபேசி கதிர்வீழ்ச்சிகள் மூளை திசுக்களில் உறிஞ்சப்பட்டு மூளையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மூளையில் புற்றுநோய் உருவாக்குதல்
  • அடிக்கடி தொலைபேசி பார்ப்பதன் மூலம் கண்ணனுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடுகள் உருவாதல்
  • ஒரே நிலையில் இருந்து அதிகமாக தொலைபேசி உபயோகிப்பதால் விரல், கழுத்து மற்றும் முள்ளந்தண்டு என்பவற்றில் வலி உண்டாகுதல்
  • தொலைபேசி பாவனையோடு பாதைகளில் வாகனம் செலுத்துவதனால் வீதி விபத்துக்கள் அதிகரித்தல்
  • தொடர்ச்சியாக தொலைபேசி பாவிப்பதன் மூலம் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு காது கேட்காமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுதல்

இவ்வாறாக அதிக தொலைபேசி பாவனையின் மூலம் ஏற்படக்கூடிய உடலில் ரீதியான பாதிப்புகளை காணலாம்.

உளவியல் ரீதியான தாக்கங்கள்

ஒருவர் அதிகமாக தொலைபேசி பாவிப்பதன் மூலம் அவரது உடல் மாத்திரம் இன்றி உளமும் பாதிக்கப்படுகின்றது. ஒருவர் தொடர்ச்சியாக தொலைபேசியை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு மன அழுத்தம், விரக்தி என்பன ஏற்படுவதனை காணலாம்.

தொடர்ச்சியான தொலைபேசி பாவனையின் மூலம் உள ரீதியான சோர்வு, மனக்குழப்பம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் ஒருவர் சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் இந்த அதிகமான தொலைபேசி பாவனை என்பது வழி வகுப்பதனை காண முடிகின்றது.

தொலைபேசி கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தொலைபேசியில் இருந்து வரக்கூடிய கதிர்வீழ்ச்சிகளின் மூலம் மனிதனுக்கு பல்வேறு தீமைகள் விளைகின்றன. இவ்வாறான கதிர்வீச்சுகளின் இருந்து எம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவேனும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தூங்கச் செல்லுகையில் தொலைபேசியை தூரமாக வைத்தல், அதிகமாக பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் இயர் போனை பயன்படுத்துதல், வீட்டில் இருக்கும் வேலைகளில் தொலைபேசியை சற்று தூரமாக வைத்திருத்தல், தேவைகளுக்காக மாத்திரம் தொலைபேசியை உபயோகித்தல்

போன்ற நடைமுறைகளை பின்பற்றுவோமே ஆனால் தொலைபேசி கதிர்வீச்சுகளில் இருந்து எம்மை ஓரளவு பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

மனிதனது தொடர்பாடலுக்கான ஒரு கருவியாக தொலைபேசி காணப்பட்டாலும் இன்று அதன் மூலம் மனிதன் எவ்வளவு நன்மைகளை அடைகின்றானோ அதே அளவு தீமைகளையும் அடைந்து கொள்கின்றான்.

தொலைபேசி பாவனையை முறையாக மேற்கொள்வதன் மூலம் தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

You May Also Like:

டிஜிட்டல் இந்தியா கட்டுரை

எதிர்கால இந்தியா பேச்சு போட்டி