அசுர வேட்டையாடும் கருடன்!- எவ்வளவு தெரியுமா?

கடந்த மே மாதம் சூரி நடிப்பில் கருடன் படம் வெளியானது. துரை செந்தில் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு கதாசிரியர் வெற்றிமாறன் என்று கூறப்பட்டது. படத்திலும் அவ்வாறு தான் வெளியானது. ஆனால் இயக்குனர் செந்தில் இது வெற்றிமாறன் எழுதிய கதை இல்லை.

இந்த ஐடிவாவை தந்தது சூரி என்றும் அதை வைத்து நாங்கள் கதை எழுதினோம் என்றும், இதை வெற்றிமாறனிடம் கூறி கதாசிரியராக உங்கள் பெயரை போடட்டுமா? என்று கேட்டதற்கு அவரும் ஆமோதித்து விட்டார் என்று கூறினார்.

இதை பார்த்த அனைவரும் ஒரு கதைக்கு ஐடியா கொடுக்கும் அளவிற்கு சூரி வளர்ந்து விட்டாரா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது இந்த படம் ரிலீஸ் ஆகுவாதற்கு தடை ஏற்பட்டதாம். இப்படம் தயாரிக்கும் போது 7 கோடி கடன் ஏற்பட்டதாம்.

அந்த கடனை திருப்பி கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ் ஆகும் என்று கூற , உடனே சூரி தான் முன்வந்து நான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்கின்றேன் என கையெழுத்து இட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது.

இவ்வாறு இருக்க தற்போது சூரி புது வீடு ஒன்றையும் காட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு வெளியில் இருந்து பழைய சோறு சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதை சாப்பிடும் போது, எந்த உணவு சாப்பிட்டாலும் இதை போல வருமா? இது சாப்பிட்ட திருப்தி வருமா? என்று கூறியுள்ளார்.

அருகில் இருந்தவரிடம் கூட நான் சாப்பிட உங்களுக்கு எச்சி ஊறுகின்றது என்று அவருக்கும் ஒரு வாய் கொடுப்பார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் எவ்வளவு உச்சத்திற்கு போனாலும் தான் கடந்து வந்த பாதைகளை மறக்கவில்லை என்றும் எளிமையாகவே வாழ்ந்தும் வருகின்றார் என்றும் கூறுகின்றனர்.

இவர் இரு உணவகங்களை நடத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடதக்கது. இவருடைய உணவங்களில் சிவகார்த்திகேயனுக்கும் பங்கு உள்ளதாம். மற்றும் இதன் கிளைகளை ஆங்காங்கே நிறுவியும் வருகின்றனர்.

இவ்வாறு இருக்க நடிப்பில் அகோர வளர்ச்சியடைந்து வரும் சூரியின் கருடன் படம் இதுவரை 39 கோடி வரை வசூல் செய்துள்ளது. தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் வசூல் என்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

more news