வரிகளுள் பிரதானமானதொரு வரியாக இவ் கலால் வரியானது காணப்படுகின்றது. கலால் வரியானது இந்தியாவில் மத்திய அரசினால் இடப்படும் ஒரு வரியாக அமைந்துள்ளதோடு குறிப்பிட்ட நாட்டில் உருவாக்கும் பொருட்களுக்காக விதிக்கப்படும் வரியாக கலால் வரி திகழ்கின்றது.
கலால் வரி என்றால் என்ன
கலால் வரி என்பது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் பொருள்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய ஒரு வரியே கலால் வரியாகும். அதாவது ஒரு நாட்டில் உருவாக்கும் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஓர் வரி வகையே கலால் வரி என குறிப்பிடலாம்.
கலால் வரியானது விதி விலக்கான பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கும் வசூலிக்கப்படும்.
மேலும் இந்தியாவில் மூன்று வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது அடிப்படை கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி ஆகும்.
ஒரு நாட்டில் உருவாக்கும் பொருட்களை தொழிற்சாலைகளில் இருந்து வெளியே விற்பனைக்காக எடுத்து செல்கையில் அப்பொருளின் தயாரிப்பாளரினால் செலுத்தப்படும் ஒரு வரியாகும்.
கலால் வரியின் அவசியம்
சிறந்த சமூக உருவாக்கத்திற்கு கலால் வரியானது அவசியமாகும். அதாவது சமூகத்தில் அனைவரும் சிறப்பாகவும் தன்னுடைய அன்றாட தேவைகளை சிறந்த முறைமையிலும் மேற்கொள்வதற்கு கலால் வரியானது துணைபுரிகின்றது.
கலால் வரிகளின் விலைகளை நுகர்வோர் நேரடியாக அவதானிப்பதற்கு இந்த வரியானது அவசியமாகின்றது. அதாவது உற்பத்தியில் கலால் வரிகள் நேரடியாக நுகர்வோரால் செலுத்தப்படுகின்றது.
அரசாங்கத்தின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழிமுறையாக கலால் வரியானது காணப்படுகின்றது. அதாவது நுகர்வை ஊக்கப்படுத்துவதை நோக்கமாக கொண்டே ஒரு வரியானது அமைந்துள்ளது. பொருளாதாரத்தை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்த கலால் வரியானது அவசியமாகின்றது.
பணவீக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கூடியதாக கலால் வரியானது காணப்படுகின்றது. அதாவது பணவீக்கம் அதிகரித்து வரும் நாட்டில் விளம்பர மதிப்பு விகிதத்தை பயன்படுத்துவன் மூலம் கலால் வரியின் அடிப்படையை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
கலால் வரி மற்றும் விற்பனை வரிக்கிடையிலான வேறுபாடுகள்
கலால் வரி மற்றும் விற்பனை வரி இரண்டுமே நுகர்வு வரிகளாக காணப்பட்ட போதிலும் நாம் வாங்கும் அன்றாட பொருட்களுக்கு விற்பனை வரி பொருந்தக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் வாடகை, மருந்து பயன்பாடுகள், மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும்பாலும் விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறாக விற்பனை வரியானது காணப்பட்ட போதிலும் கலால் வரியானது குறிப்பிட்ட தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தப்படும் வரியாகும். கலால் வரியானது மாநில வருவாயில் மிக சிறிய அளவிலேயே அமைந்து காணப்படுகின்றன.
ஏனெனில் கலால் வரியானது புகையிலை, அல்ககோல் போன்ற சில குறிப்பிட்ட பொருட்களுக்காக விதிக்கப்பட்ட ஒரு வரியாகும். இந்த வரியானது கொள்முதல் விலையின் சதவீதமாக அல்லாமல் ஒரு யுனிட் அடிப்படையில் காணப்படுகின்றது.
கலால் வரியின் தீமைகள்
கலால் வரியின் மூலம் நிர்வாக செலவிற்கு மாற்றமாக அதிக விலையை வரியாக செலுத்த வேண்டிய ஒரு சூழல் ஏற்படுத்தப்படுகின்றமை கலால் வரியின் மூலம் ஏற்படும் தீமைகளுள் ஒன்றாகும்.
கலால் வரியின் ஊடாக பொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொள்கின்றனர். அதாவது கலால் வரியின் மூலமாக பல சவால்கள் ஏற்படினும் ஒரு சிறந்த சமூக உருவாக்கத்திற்கு இந்த கலால் வரியே துணை புரிகின்றது.
You May Also Like: