சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தி மூலம் அறிமுகமான இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகின்றார்.

அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கில் அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் சிறந்த பங்காற்றி வருகிறது.

சூர்யா இறுதியாக ஹீரோவாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அது அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. அதன் பின்கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இறுதி கட்சியில் என்றி கொடுத்தி மாஸ் காட்டியிருப்பார்.

விக்ரம் படம் ஹிட் ஆவதற்கு சூரியாவின் மாஸ் என்றியும் ஒரு மிகபெரிய பங்கு வகிக்கின்றது.

தற்போது கங்குவா படத்தில் நடித்துவரும் இவர் 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று படத்தில் நடித்திருப்பார். கொரொனா கால காட்சத்தில் படம் வெளியானதால் தியேட்டரில் படம் வெளியாகவில்லை. அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில் கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு, பூ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தியேட்டரில் அவர்கள் நடித்த படங்கள் ரீரிலீஸ் ஆகி வருகின்றன. தற்போது நடிகர் சூர்யாவும் ஜூலை 23 திகதி பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

சூர்யாவின் பிறந்த நாளுக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன், கஜனி, சிங்கம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. சூர்யாவின் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.