நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளார். தொடர்ந்தும் பல படங்களில் நடித்தும் வருகின்றார்.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று வெளியாகின்றது. படத்தின் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பால கிருஷ்ணா விருந்தினராக வந்திருந்தார்.
மேடையில் அஞ்சலி இருக்கும் போது அவரை பால கிருஷ்ணா தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பால கிருஷ்ணாவிற்கு எதிராக பல கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் அஞ்சலி தனது ட்வீட்டரில் பதிவொன்றினை போட்டிருக்கின்றார்.
பாலகிருஷ்ணாவும் தானும் பல ஆண்டுகளாக நண்பர்களாக ஒருவரை ஒருவர் மதித்து வருகிறோம். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வந்து கலந்து கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். மேடையில் பகிர்ந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுஅனைத்து சர்ச்சைகளையும் முடித்து வைத்துள்ளார்.
Be the first to comment