கூலி டீசரால் எழுந்த சர்ச்சை!-சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

ரஜனி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் கூலி. இப் படத்திற்கான டீசர் வெளியானதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது. இது இவருடைய 171 வது படமாகும்.

71 வயதுகளை கடந்த இவர் சினிமாவில் தற்போது வரைக்கும் கதாநாயகனாக தமிழ் சினிமாவியே கலக்கி வருகிறார்.

தற்போது ரஜனி வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஞானவேல் இயக்கி வருகின்றார்.

இப்படத்துக்கான டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் 1983ல் ரஜினி நடித்த ‘தங்கமகன்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘வாவா பக்கம் வா’ பாடலின் ‘டிஸ்கோ’ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.

 இந்த இசை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ’வா வா பக்கம் வா’ பாடலின் அனைத்து விதமான உரிமையும் தன்னிடமே உள்ளது.

எனவே அந்த பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதற்குமுன் வெளியான விக்ரம், ஃபைட் கிளப் உள்ளிட்ட படங்களிலும் தன்னுடைய இசை முறையான அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

more news