நடிகர் சூரி நடிப்பில் துரை செந்தில் இயக்கத்தில் வெளியான படம் கருடன். இப் படத்தில் சூரி சொக்கனாக நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்.
இப் படத்திற்கு எந்த விதமான எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. இப் படத்தில் நடித்த அனைத்து கதா பத்திரங்களையும் செதுக்கி எடுத்துள்ளார் இயக்குனர் துரை செந்தில். சசிகுமாரின் நடிப்பும் இப் படத்தை மேலும் மெருகேற்றி இருக்கின்றது.
கர்ணா வேடத்தில் நடித்த உன்னி முகுந்தனுக்கு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
இங்கு நடக்கும் துரோகத்திற்கு மத்தியில் விஷ்வாசமா? இல்லை நியாயமா? இதில் சூரி எதை தெரிவுசெய்தார் என்பதே கதை ஆகும்.
காமெடியனாக இருந்து கிரோவாக நடிக்க வந்தவர்கள் தான் சந்தனம், யோகி பாபு. இந்த வரிசையில் தான் சூரியும் வந்தவர். இருப்பினும் சூரியின் வளர்ச்சி அகோரமானது. சூரி இவ்வாறு பின்னி பெடல் எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை . இப் படத்தின் மூலம் பரோட்டா சூரி கருடனாக மாறிவிட்டார். more news கருடனின் வேட்டை ஆரம்பித்து விட்டது.
இவர் இந்த படத்திற்கு 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். விடுதலை படத்திற்கு வெறும் 40 லட்சமே சம்பளமாக வாங்கினார்.
இவ்வாறு இருக்க இப் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. இப் படம் முதல் நாள் 3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. எப்படியும் கருடன் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர் பார்க்கபடுகின்றது.

