மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு நேர்மறையான கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆரம்பத்தில் சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபத்திரங்களில் நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பின்னர் நானும் ரௌடி தான் , விக்ரம் வேதா, சேதுபதி, இறைவி , 96 போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் 96 படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த காதல் கதையாக இருந்தது.
இவ்வாறு இருக்க மகாராஜா ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காமெடியான பார்த்து வந்த சிங்கம்புலி இப் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். விடுதலை படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. காமெடியனுக்கு ஹீரோ பாத்திரம் ஒத்து போவது போல வில்லன் பத்திரமும் ஒத்து போவது ரோம்பவே கடினமான விடையம். இதனை வருடங்களாக காமெடியானாக பார்த்த ஒருவர் வில்லனாக மாறியது அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது.
இந்த படத்திலும் கருடன் படத்தின் பாத்திர தெரிவு போல நிகழ்ந்துள்ளது. அனைத்து பாத்திரங்களையும் இயக்குனர் தேடி தேடி எடுத்துள்ளார். ஒரு சிற்பி எப்படி ஒரு சிலையை செதுக்கு கின்றானோ அப்படிதான் பாத்திர தேர்வும் நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி எந்த பாத்திரம் கொடுத்தலும் சர்வசாதாரணமாக நடித்து முடித்து விடுவார். இதிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இது அவருடைய 50 வது படம் எந்த நடிக்கர்களுக்கும் அவர்களுடைய 50 வது படம் கை கொடுப்பதில்லை. தோல்வியிலேய முடியும்.
ஆனால் விஜய் சேதுபதிக்கு இது முதல் நாளே பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. முதல் நாள் மட்டும் 7 கோடி வசூல் செய்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் எப்படியும் 30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
இப் படத்தின் கருத்து நாம் எதை செய்கின்றோமோ அதுதான் நமக்கு திருப்பி கிடைக்கும் என்பதே. ரசிகர்கள் இவருக்கு மக்கள் செல்வன் என்று வைத்ததுக்கு பதிலாக மகாராஜா என்று வைத்திருக்கலாம் என்றும் இவர் நடித்ததிலே முகவும் சிறந்த படம் இதுதான் என்றும் கூறியுள்ளனர்.