இந்திய நாட்டின் தலைசிறந்த கட்டட கலைக்கு ஓர் உதாரணமாக விளங்குவது மாமல்லபுரம் ஆகும். இதன் சிறப்புகள் இந்திய நாட்டின் அஸ்திவாரமாக இன்றும் உள்ளன.
மனம் கவரும் மாமல்லபுரம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மாமல்லபுர அமைவிடம்
- மாமல்லபுரத்தின் சிறப்பு
- மாமல்லபுரத்தில் தமிழர்களின் பெருமை
- மாமல்லபுரத்தின் சுற்றுலா தொடர்பு
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் தற்கால பெருமைகளை விட மன்னராட்சிகளில் கட்டப்பட்ட கலைகளின் நுட்பங்களும் தொழிநுட்பரீதியான அறிவும் இன்றும் உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அழிந்து போன கலைகள் ஏராளம் இருந்தாலும் சில அழிக்க முடியாத கட்டடக்கலைகலை நம் இந்திய நாட்டில் சிலவற்றை பாதுகாப்பாக வைத்துள்ளோம். அந்தவகையில் நம் இந்திய நாட்டின் மாபெரும் அழகுகொஞ்சும் மாமல்லபுரம் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.
மாமல்லபுரத்தின் அமைவிடம்
இந்திய நாட்டில் தமிழ்நாட்டு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இது ஏழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் பல்லவர்களின் ஆட்சியின் போது அமைக்கப்பட்டவையாகும். தமிழ் மன்னர்களான பல்லவர்களின் சொர்க்க பூமியாக மாமல்லபுரம் அழைக்கப்பட்டது.
சுனாமி தாக்கப்பட்ட போது இக்கோவிலில் கட்டிடங்களின் சிதைவை கண்டறிந்ததாகவும் ஐரோப்பியர்களின் பழைய குறிப்புகளில் ஏழு அடுக்கு தூபி எனவும் மாமல்லபுரத்தை அழைத்தனர் எனவும் கூறப்படுகின்றது.
மாமல்லபுரத்தின் சிறப்பு
மாமல்லபுரத்தை ஆட்சி செய்த பல்லவர்கள் மாமல்லபுர கடற்கரையை முக்கிய துறைமுகமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றன.
அதைத்தொடர்ந்து இங்கு மாமல்லபுரத்தின் கடற்கரை கோவிலும் அதன் சிற்பகலைகளும் சிறப்பு மிக்கவையாகும். இதன் பெருமையை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாக 1984ஆம் ஆண்டு அறிவித்தது.
கடற்கரை கோவில் தொடர்ந்து அங்கு அர்ஜுனா தபசு என்ற பெரிய பாறையில் பல சிற்பங்களை மிக தத்துருபமாக வரையப்பட்டு காணப்படும். அதுவும் மிக அற்புதமான சிறப்பாக காணப்படுகின்றது.
இங்கு காணப்படும் தேர்ச்சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுகளில் கூறப்படுகின்றது. அத்துடன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் என அமைக்கப்பட்ட கோவிலாகவும் குகைகோவில் விளங்குகின்றது.
மாமல்லபுரத்தின் தமிழர் பெருமை
சோழ, சேர, பாண்டிய மூவேந்த தமிழ் மன்னர்கள் போல் பல்லவர் காலத்து மன்னர்களையும் தமிழ் மன்னர்கள் பட்டியில் தான் இன்றும் உள்ளது.
பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கடற்கரைகோவிலின் சிற்பக்கலைகளும் அர்ஜுனா தபசு என்ற பெரிய உயரமான பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் தமிழரின் மாபெரும் அடையாளமாக சிறப்பித்து கூறப்படுகின்றது.
அத்துடன் வராகமூர்த்தி சிற்பம், மகிடாசுரமர்த்தினி சிற்பம், விஷ்ணுவுக்கு அமைக்கப்பட்ட கோவர்த்தன மலை சிற்பம் என அனைத்தும் எட்டாம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே மிக நுட்பமாக தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுர சுற்றுலா தொடர்பு
மாமல்லபுரம் என்பது மகாபலிபுரம் என்ற பெயரில் தற்காலத்தில் அழைக்கப்படுகின்றன. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா தளமாகவும் காணப்படுகின்றது. மாமல்லபுர கடற்கரையின் அழகை காண பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அத்துடன் அதன் வியாபித்து இருக்கும் சிற்பங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும் பார்வையிடவும் பெரும் ஆர்வத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருவது உண்டு.
தாஜ்மஹால் போல் இங்கும் காதல் அடையாளங்களாக சிற்பக்களைகளை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புராதன கதைகளும் சிற்பங்களாக அனைவரினதும் பார்வைக்கு வியப்பை தந்து நிற்கின்றது.
முடிவுரை
இந்திய நாட்டின் தமிழரின் அடையாளமாக காணப்படும் மாமல்லபுரம் மிக அழகிய அமைதியான சுற்றுலாத்தளம் என்பதை அனைவரும் அறிந்தவை. இதன் சிறப்புக்களை பார்க்க பார்க்க கண்கள் வியக்க வைக்கும்.
பல நுண்ணிய சிற்பக்கலையை மாமல்லபுரத்தில் கண்டு உலகமே வியக்க வைத்துள்ளது. இது இந்தியாவின் பொக்கிஷத்தில் ஒன்றாகும்.
You May Also Like: