கணிதத்தில் காணப்படும் 0 என்ற எண்ணை குறிக்கும் எண் இலக்கமே பூஜ்ஜியமாகும். அந்த வகையில் இந்த இலக்கமானது மனித பண்பாடு, நாகரீகத்தின் வளர்ச்சிக்கு ஆதரமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த பூஜ்ஜியமானது பாபிலோனில் எண்களை எழுதும் போது ஓர் இடத்தை நிரப்புவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனை வெறும் குறியீடாக கருதாமல் எண்ணாக பாவித்தவர்களே இந்தியர்கள் ஆவார்.
பூஜ்ஜியம் வேறு சொல்
- சுழியம்
- சுன்னம்
- சுழி
- புழையம்
- அற்றம்
- சூனியம்
- ஒன்றுமில்லை
பூஜ்ஜியம் சீரோவாக மாறியமைக்கான காரணம்
இந்தியாவில் ஆரம்ப கால கட்டத்தில் பூஜ்ஜியத்தை சூனியம் என்ற சொல்லினாலேயே அழைத்தனர். அதாவது வடமொழிச் சொல்லாக காணப்பட்ட சூனியம் என்ற பதமானது சிஃபிர் என்று மொழி பெயர்க்கப்பட்டது.
இதன் பின்னர் ஆங்கிலத்தில் சைபர் என்று மருவி வந்ததோடு பிற்பட்ட காலங்களில் செஃவிரியம் என்ற சொல்லே “Zero” வாக உருவெடுத்தது. அந்த வகையில் இன்று பூஜ்ஜியத்தை சீரோவாக அழைக்கின்றனர்.
You May Also Like: