தமிழ் பரீட்சையில் அதிகம் கேட்கப்படும் வினாக்களில் சேர்த்து எழுதுதலும் ஒன்றாகும். இந்த பதிவில் உள்ளவை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
சேர்த்து எழுதுக
தேயிலை+நீர் | தேநீர் |
ஆறு+நீர் | ஆற்றுநீர் |
பல்+பொடி | பற்பொடி |
மலை+உச்சி | மலையுச்சி |
மரம்+வேர் | மரவேர் |
முள்+செடி | முட்செடி |
தமிழ்+சொல் | தமிழ்ச்சொல் |
மண்+குடம் | மட்குடம் |
மலர்+செண்டு | மலர்ச்செண்டு |
வடக்கு+கிழக்கு | வடகிழக்கு |
பச்சை+கிளி | பச்சைக்கிளி |
மனம்+மாற்றம் | மனமாற்றம் |
தேன்+மொழி | தேன்மொழி |
வாழை+காய் | வாழைக்காய் |
மா+தோப்பு | மாந்தோப்பு |
கரிய+மேகம் | கார்மேகம் |
செம்மை+தாமரை | செந்தாமரை |
பூ+தோட்டம் | பூந்தோட்டம் |
திரை+படம் | திரைப்படம் |
உன்னை+தவிர | உன்னைத்தவிர |
1. கணினி+தமிழ் சேர்த்து எழுதுக
- கணினித்தமிழ்
2. எட்டு+திசை சேர்த்து எழுதுக
- எட்டுத்திசை
3. சிலம்பு+அதிகாரம் சேர்த்து எழுதுக
- சிலப்பதிகாரம்
4. நிலவு+என்று சேர்த்து எழுதுக
- நிலவென்று
5. தமிழ்+எங்கள் சேர்த்து எழுதுக
- தமிழெங்கள்
6. இடம்+புறம் சேர்த்து எழுதுக
- இடப்புறம்
7. பாட்டு+இருக்கும் சேர்த்து எழுதுக
- பாட்டிருக்கும்
8. நிலா+ஒளி சேர்த்து எழுதுக
- நிலவொளி
9. முத்து+சுடர் சேர்த்து எழுதுக
- முத்துச்சுடர்
10. தரை+இறங்கும் சேர்த்து எழுதுக
- தரையிறங்கும்
11. ஏன்+என்று சேர்த்து எழுதுக
- ஏனென்று
12. இல்லாது+இயங்கும் சேர்த்து எழுதுக
- இல்லாதியங்கும்
13. மருத்துவம்+துறை சேர்த்து எழுதுக
- மருத்துவத்துறை
14. ஔடதம்+ஆம் சேர்த்து எழுதுக
- ஔடதமாம்
15. நீலம்+வான் சேர்த்து எழுதுக
- நீலவான்
16. செயல்+இழக்க சேர்த்து எழுதுக
- செயலிழக்க
17. ஆழம்+கடல் சேர்த்து எழுதுக
- ஆழக்கடல்
18. வாழை+இலை சேர்த்து எழுதுக
- வாழையிலை
19. பயன்+இலா சேர்த்து எழுதுக
- பயனில்லா
20. கலம்+ஏறி சேர்த்து எழுதுக
- கலமேறி
21. பெருமை+வானம் சேர்த்து எழுதுக
- பெருவானம்
22. வணிகம்+சாத்து சேர்த்து எழுதுக
- வணிகச்சாத்து
23. அடிக்கும்+அலை சேர்த்து எழுதுக
- அடிக்குமலை
24. பெருமை+அறிவு சேர்த்து எழுதுக
- பெருமறிவு
25. தம்+உயிர் சேர்த்து எழுதுக
- தம்முயிர்
You May Also Like: