சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணையும் சிபி!- ஹிட் கொடுப்பாரா?

தழில் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுமளவிற்கு வளர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் சிபி சக்காரவர்த்தியின் இயக்கத்தில் வெளியான படம் டான். கல்லூரி வாழ்க்கையை படமாக்கியுள்ளனர். இப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்பொழுது அமரன். எஸ் கே 23 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அமரன் டீசர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளியகியது. டீசரை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருவதால் இப் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி விட்டது. இப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதே சமயத்தில் ஏ ஆர் முருக்கதாசின் இயக்கத்தில் எஸ் கே 23 இல் நடித்து வருகிறார். இதில் ருக்மணி இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் சிபி டான் படத்தை முடித்து விட்டு ரஜனியுடன் படம் பண்ணுவதாக இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்பொழுது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் பண்ண போவதாக அறிவிப்புகள் வெளியாகியது.

More News