தாமதம் என்ற சொல்லானது அனைவருக்கும் பரீட்சயமானதோர் சொல்லாகவே காணப்படுகின்றது. அதாவது தாமதம் எனப்படுவது நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்களை அந்த நேரத்தில் செய்யாது காலம் தாழ்த்தி செய்வதாகும்.
உரிய விடயங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் போதே எம்மால் வாழ்வில் வெற்றியீட்ட முடியுமே தவிர மாறாக தாமதமாக செய்வோமேயானால் எமது வெற்றியும் தாமதமாகவே எம்மை வந்தடையும். அந்த வகையில் தாமதம் என்ற சொல்லிற்கான எடுத்துக்காட்டுக்களை பின்வருமாறு நோக்கலாம்.
பரீட்சைக்கு காலதாமதமின்றி படித்து கொள், என்ன இவ்வளவு தாமதம் நேற்று ஏன் வீட்டுக்கு வரவில்லை போன்றவற்றை குறிப்பிடுவதோடு தாமதம் என்ற சொல்லானது இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது.
தாமதம் வேறு சொல்
- காலக்கழிவு
- மந்தம்
- தள்ளி வைத்தல்
- ஒத்திவைத்தல்
- நேரம் தாழ்த்தல்
- கால நீட்சி
You May Also Like: