சினிமாவில் நடித்து தமக்கான ஒரு இடத்தை பெற்ற பின்பு அரசியக்குள் நுழைவது காலாகாலமாக நடந்து வருவதே. எம் ஜி ஆர் முதற்கொண்டு விஜய் வரைக்கும் அரசியலுக்குள் நுழைந்தவர்கள்.
கமல் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் நடிகர் ரஜனியும் அரசியலுக்குள் வர போவதாக சில வதந்திகள் பரவியது. ஆனால் அவருக்கு பதிலாக விஜய் களமிறங்கிவிட்டார். தற்பொழுது விஷாலும் அரசியலுக்குள் குதித்து விட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது விஷால் ஓட்டு போடுவதற்கு சைக்கிளில் சென்றிருந்தார்.
வரும் 26 ம் திகதி விஷாலின் ரத்னம் படம் வெளியாகவுள்ளது. இப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வருகிறார்.
இந் நிலையில் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த மாணவர் ‘உங்களை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனே விஜய்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு இயக்குனராக வேண்டுமென்றால் விஜயை வைத்துதான் படம் எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது சமீபத்தில் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டீர்கள். இதுவும் விஜயின் இன்ஸ்பிரேஷன்தானா?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் என்னுடைய சீனியர். அவர் சந்தித்த விமர்சனங்களை நான் ஆரம்பத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படி இருந்தும் விஜய் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இப்போது உங்கள் முன் தளபதியாக நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை. அப்படி இருக்கும் போது அவர் உங்களுக்கு மட்டுமில்லை . எனக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் தான். என்று கூறியுள்ளார்.
நான் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதற்கு விஜய் காரணம் இல்லை. அதற்கு காரணம் என்னிடம் ஒரு வண்டி தான் இருக்கு அதையும் என் அம்மா அப்பாவுக்கு கொடுத்திட்டேன். இருந்த எல்லா வண்டியையும் விற்று விட்டேன் .வேறு வண்டி வாங்கவும் காசு இல்லை. ரத்னம் படப்படிப்பின் போது காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு எல்லாரும் வண்டியில் சென்று விட்டார்கள். ஆனால் நான் மட்டும் சைக்கிளில் இளையராஜா பாட்டு கேட்டு சென்றேன் என்று கூறினார்.