தக் லைஃப் படமானது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது. இப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றது.
ஆரம்பத்தில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டு பின்னர் விலகியதாகவும் தகவல் கசிந்தது.
சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன்2 ஆகிய படங்கள் அவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது.
ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கால்ஷீட் பிரச்சனையால் தக்லைப் படத்தில்இருந்து விலகிவிட்டனர். துல்கர் சல்மான் இற்கு பதிலாக சிம்புவை இறக்கிவிட்டார் மணிரத்னம். இதனால் ஜெயம் ரவி விலகி விட்டார் என வதந்திகள் பரவின.
கமல் நாயகனாக நடிக்கும் படமே தக்லைப். கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இவரின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப் படமும் மாபெரும் வெற்றியை தட்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொன்னியின் செல்வன் படத்தையும் மணிரத்னம் தான் இயக்கினார். அதில் ஜெயம் ரவிக்கு 4 கோடி தான் சம்பளம் வழங்கபட்டது. இவ்வாறு இருக்க இப் படத்திற்கும் அதே சம்பளம் தம் தர முடியும் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.
ஆனால் ஜெயம் ரவி ஒரு படத்திற்கு 15 தொடக்கம் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இதனால் தான் அவர் படத்தை விட்டு விலகியுள்ளார்.
ஆனால் அனைவரும் ஜெயம் ரவிக்கும் , சிம்புவிற்கும் பிரச்சனை என்பதால் தான் ஜெயம் ரவி விலகினார் என்று இவர்கள் இருவருக்கும் முடிச்சு போட்டு வருகின்றனர்.